142. கொடைமடமும் படைமடமும்! பாடியவர் : பரணர். பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். திணை: பாடாண். துறை: இயன்மொழி. அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும், உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும், வரையா மரபின் மாரி போலக், கடாஅ யானைக் கழற்கால் பேகன் கொடைமடம் படுதல் அல்லது, படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.
புறநானூறு > பாடல்: 142
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக