173. யான் வாழுநாள் வாழிய! பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன். திணை: பாடாண். துறை: இயன்மொழி. யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை; யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன ஊணொலி அரவந் தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச், சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும், மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்; பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே,
புறநானூறு > பாடல்: 173
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக