228. ஒல்லுமோ நினக்கே! பாடியவர்: ஐயூர் முடவனார். பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: பொதுவியல். துறை: ஆனந்தப் பையுள். கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே! இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை, நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே! அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்? நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை, விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் கொடிநுடங்கு யானை நெடுமா வளவன் தேவர் உலகம் எய்தினன்; ஆதலின், அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம் இருநிலம் திகிரியாப், பெருமலை மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?
புறநானூறு > பாடல்: 228
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக