236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்! பாடியவர்: கபிலர் திணை: பொதுவியல் துறை: கையறுநிலை குறிப்பு: வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது. கலைஉணக் கிழிந்த, முழவுமருள் பெரும்பழம் சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும் மலை கெழு நாட! மா வண் பாரி கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் புலந்தனை யாகுவை- புரந்த யாண்டே பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது ஒருங்குவரல் விடாஅது ‘ஒழிக’ எனக்கூறி, இனையை ஆதலின் நினக்கு மற்றுயான் மேயினேன் அன்மை யானே; ஆயினும், இம்மை போலக் காட்டி, உம்மை இடையில் காட்சி நின்னோடு உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!
புறநானூறு > பாடல்: 236
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக