304. எம்முன் தப்பியோன்! பாடியவர்: அரிசில்கிழார் திணை: தும்பை துறை : குதிரை மறம் கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி, நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி, வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி பண்ணற்கு விரைதி, நீயே;’நெருநை எம்முன் தப்பியோன் தம்பியடு, ஓராங்கு நாளைச் செய்குவென் அமர்’ எனக் கூறிப், புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான் கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு, வலம்படு முரசின் வெல்போர் வேந்தன் இலங்கு இரும் பாசறை நடுங்கின்று; ‘இரண்டா காது அவன் கூறியது’ எனவே.
புறநானூறு > பாடல்: 304
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக