307. யாண்டுளன் கொல்லோ! பாடியவர்: பெயர் புலனாகவில்லை திணை: தும்பை துறை : களிற்றுடனிலை ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ? குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்; வேனல் வரி அணில் வாலத்து அன்ன; கான ஊகின் கழன்றுகு முதுவீ அரியல் வான்குழல் சுரியல் தங்க, நீரும் புல்லும் ஈயாது உமணர் யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த வாழா வான்பகடு ஏய்ப்பத், தெறுவர் பேருயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு, வெஞ்சின யானை வேந்தனும், ‘ இக்களத்து எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல்’ எனப், பண் கொளற்கு அருமை நோக்கி, நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.
புறநானூறு > பாடல்: 307
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக