350. வாயிற் கொட்குவர் மாதோ! பாடியவர்: மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர் யாங்கா வதுகொல் தானே, தாங்காது? படுமழை உருமின் இறங்கு முரசின் கடுமான் வேந்தர் காலை வந்து, எம் நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ; பொருதாது அமருவர் அல்லர்; போர் உழந்து அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய வடிவேல் எ·கின் சிவந்த உண்கண், தொடியுறழ் முன்கை, இளையோள் அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.
புறநானூறு > பாடல்: 350
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக