திருமந்திரம் | Thirumanthiram |
ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே. 10
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 3. அருச்சனை > பாடல்: 1012
Om rises from under navel
Va rises from throat stretched,
Na has its seat in forehead,
Bindu and Nada are still above placed.
பிரணவத் தியானத்தில் ஓங்காரம் மூலாதாரத்திலும், மகாரம் உந்தியிலும், அகாரம் இருதயம்,கண்டம் என்ப வற்றிலும், உகாரம் புருவ நடுவிலும், விந்துவும் நாதமும் அதற்குமேல் நெற்றியில் உள்ள வேறு வேறு இடங்களிலும் வைத்துத் தியானிக்கப்படும் என்க.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL