தானொரு கூறு சதாசிவன் எம்மிறை வானொரு கூறு மருவியும் அங்குளான் கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற தானொரு கூறு சலமய னாமே. 10
திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 112
In one Part, He, Sadasiva my Lord; One heavenly Part in Heaven resides; One Kingly Part, the spirit that the body heaves; One His Part to all motion transformed.
எம் கடவுளாகிய சிவபெருமான் தானே ஒரு கூற்றில் சதாசிவ மூர்த்தியாய் `சாந்தியதீதை` என்னும் ஒரு கலையுள் நின்று அதனையே தன்னிடமாகக் கொண்டும் இருக்கின்றான். மற்றொரு கூற்றில் உயிர்க்குயிராய் நின்று உணர்த்துவதாகிய இலயசிவனாயும் நிற்கின்றான். பிறிதொரு கூற்றில் பாசங்களின் வழிநின்று நடத்தும் மறைப்பாற்றலாயும் உள்ளான். வேறொரு கூற்றில் பாசத்தை நீக்கித் தன்னைத் தரும் அருளாற்றலாயும் இருப்பன்.