திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 4. கடுஞ் சுத்த சைவம் > பாடல்: 1439
The five Tattvas that constitute the body, The thirty more that together constitute them And the one Tattva that is yet beyond Pure Maya, All these they transcend; The thick layers of primal bondage they dissolve And of certain, realize the Self That the way of Siddhantins true.
தூல சூக்கும பர உடம்புகளாய் நிற்கும் முப்பத் தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிவான நிலையை யுடைய பெரிய மாயையாம். அவற்றை ஆன்மா நீக்கின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவ மலத்தைக் கழுவித் தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும். அவ்வாறு எய்துவதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.