திருமந்திரம் | Thirumanthiram

எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி
வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே. 15

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்) > பாடல்: 1744

The heart is the divine Jnana Sakti
The head the heavenly Para Sakti
The tresses the Adi Sakti
The colorful armour is Icchha Sakti
In the eyes is the active Kriya Sakti.

இருதயம் முதலாகக் கூறிய சடங்க மந்திரங்கள் ஆறனுள் அத்திரம் ஒழிந்த ஏனைய ஐந்தில் சிவனது ஞான சத்தியே இருதய மந்திரமாயும், பராசத்தியே சிர மந்திரமாயும், ஆதி சத்தியே சிகா மந்திரமாயும், இச்சா சத்தியே கவச மந்திரமாயும், கிரியா சத்தியே நேத்திர மந்திரமாயும் நிற்கும்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, May 28, 2026