திருமந்திரம் | Thirumanthiram

ஆங்கவை Yமூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே. 20

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்) > பாடல்: 1749

Moon and Fire
To Sun, Moon and Fire
He lends His fiery rays;
The seven worlds twice he supports;
And in the Center of Spaces Vast
He stands,
He is the Beginning, He is the End,
His own Form, cool as moon.

உடம்பின்கண் ஒன்றின்மேல் ஒன்றாய் உள்ள அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் என்னும் மூன்றிலும் நெருப்புப் போன்ற ஒளி வீச, `சிவனது பேதம் ஒன்பதுள் நடுவணதாகிய சதாசிவ மூர்த்தத்தில் உலகத் தோற்றமும், ஒடுக்கமும் நிகழ்வன` என்று உணர்ந்து நின்றால், அந்தச் சதாசிவ மூர்த்தமும், உலகத்தோற்றமும், ஒடுக்கமுமாய் நிற்கின்ற சத்தி, அவ்வுணர்ச்சியை உடையவனது உடலில் சந்திரன் போல ஒளிவிட்டு நிற்கும்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, May 28, 2026