கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள் எய்தி அவனை இசையினால் ஏத்துமின் ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 13
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை > பாடல்: 2043
God There is nothing, you need give up; The Five senses are organs false That the five cravings to meet arose; Reach to Him in your thoughts And praise Him in songs sweet.
`ஐந்திந்திரியங்களை அடக்குதல் நம்மால் ஆகிற காரியம் அன்று` என இளைத்து, அதனைக் கைவிடுதற்குக் காரணம் சிறிதும் இல்லை. ஏனெனில், ஐந்திந்திரியங்களின் அவாவிற்குக் காரணமான நிலையற்ற பொருள்களில் பொருந்தியுள்ள புலன்களும் ஐந்திற்குமேல் இல்லை. அந்த ஐந்தையும் அடக்குதற்குச் செய்யத் தக்க உபாயமும் ஒன்றே ஒன்றுதான். அஃது ஒருபொழுதும் நம்மை விட்டு நீங்கிச் சேய்மையில் இல்லாது, எப்பொழுதும் நம் உள்ளத்திலேயே வீற்றிருக்கின்ற சிவனை நல்ல இசைப் பாடல்களால் துதிப்பதுதான். ஆகவே, அதனைச் செய்து இந்திரியங்களை அடக்கி, இன்பம் எய்துங்கள்.