ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம் காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. 6
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 6. சுத்த நனவாதி பருவம் > பாடல்: 2192
Anava (Egoity), Maya (Ignorance) and Karma (Action) These the Malas (Impurities) are; They are like the embryo, the bran and the husk Are unto the grain of rice; They touch not the Lord, but apart stand; Be rid of your Pasas one by one, And adore the Lord.
`ஆணவம், மாயை, கன்மம்` - என மலங்கள் மூன்றாம். அவற்றை எதிர்நிரல் நிறையாக வைத்து, அரிசிக்கு முளை, தவிடு, உமி - இவைபோல்வனவாக உணர்க. ஆன்மாவும் சிவனைப் போலச் சித்துப் பொருளேயாயினும், அரிசி போன்ற ஒரு தன்மையை அஃது உடைமையால் அரிசிக்கு உமி முதலிய குற்றங்கள் அநாதியாக இருத்தல் போல, ஆணவம் முதலிய குற்றங்கள் அநாதியே உளவாக, அது சிவனைப் போலப் பதியாகாது, பசுவேயாய் நின்றது. உனது தன்மையை இங்ஙனம் நீ உள்ளவாறு உணர்ந்து, பாசங்களில் பற்றுக் கொள்ளாது விடுத்துப் பதியாகிய சிவனைப் பற்றி இன்புறுவாயாக.