இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன் கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும் திடமது போலச் சிவபர சீவர் உடனுரை பேதமும் ஒன்றென லாமே. 1
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 25. முக்கரணம் > பாடல்: 2485
One person in places three functions 591 Yet may be as three different appear; Unto this Are Jiva, Para and Siva; One are they But in different places appear.
உயிர் சகலாவத்தையில் தத்துவங்களோடு கூடி `சீவான்மா` எனப் பெயர் பெற்று நிற்பினும் அது தத்துவங்களின் வேறாதல்போல்வதும், நின்மலாவத்தையில் தத்துவங்களின் நீங்கி வாக்குகளின் வடிவாய் நிற்குமிடத்து `அந்தரான்மா` எனப்பெயர் பெற்று நிற்பினும் அது வாக்குகளின் வேறாதல் போல்வதும் பரா வத்தையில் பரத்தோடு கூடிப் பரான்மா எனப் பெயர் பெற்று நிற்பினும் அது பரத்தின் வேறாதல் போல்வதுந்தாம். பரம் பொருள் சீவான் மாவில் நிறைந்து `சிவம்` என நிற்பினும் அது சிவனின் வேறாதலும், பரான்மாவில் நிறைந்து `பரம்` என நிற்பினும் அது பரான்மாவின் வேறாதலும்.