திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 29. உபசாந்தம் > பாடல்: 2506
Seed of Mukti is Knowledge of Primal One; Seed of Bhakti is intense adoration meek; Seed of Siddhi is Self, Siva-Para Becoming; Seed of Sakti is State of Upasanta.
``பற்றுக பற்றற்றான்; பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு``* என்றபடி, உலகப் பற்றை நீக்குதற்கு வழி சிவப்பற்றைக் கொள்ளுத -லாகும். அப்பற்று உண்டாதற்கு வழி, சிவனைக் குருலிங்க சங்கமங் -களை வழிபட்டு உறுதுணையாகப் பற்றுதலாகும். மனம் புலன்களின் வழி ஓடாது தன் வயப்படுதற்கு வழி யோகசமாதி. முத்திக்கு வழி சிவ ஞானம். அந்த ஞானம் வருதற்கு வழி உயிர் உபசாந்தத்தை அடைதலாம்.