ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல் பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி கூறாத சாக்கிரா தீதம் குருபரன் பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே. 4
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 29. உபசாந்தம் > பாடல்: 2509
Removing Anava within, Entwined with Tattvas six times six, And realizing Self-knowledge, --these acts of purification To Jagrat-Turiya (Jiva Turiya) State belongs; The Grace of Guru Param dawns In the Jagratatita Turiya (Para Turiya) That defies speech; When that is crossed and Siva Turya is reached, Then is Upasanta pervasive.
முப்பத்தாறு தத்துவங்களும் தன்னின் மேம்பட்டுத் தன்னை மயக்காதபடி அவைகளைக் கீழ்ப்படுத்தி, அவைகளால் வரும் மயக்கத்தினின்றும் நீங்குதலே தன்னைத் தான் பெறுதலாகிய ஆன்ம தரிசனமாகும். (சிவரூபம் இதில் உடன் நிகழும். ``தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிரெல்லாம் தொழும்`9 என்றார் திருவள்ளுவரும்) ஆன்ம தரிசனத்திற்குப்பின் நிகழ்வதாகிய ஆன்ம சுத்தியாவது, சொல் நிகழ்ச்சியில்லாத, மௌன நிலையாகிய நின்மல துரியாதீதமாகும். (இதில் சிவதரிசனமும், சிவயோகமும் உடன் நிகழும்) ஆன்ம சுத்திக்குப் பின் அடையற்பலாதாகிய ஆன்ம லாபமாகிய சிவப்பேறாவது, பர துரியா தீதமே.