கொன்றை வேந்தன் | Kondrai Venthan | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. கொன்றை வேந்தன் > கடவுள் வாழ்த்து > பாடல்: 0 | |
| 1 | அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 1 | |
| 2 | ஆலயம் தொழுவது சாலவும் நன்று. கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 2 | |
| 3 | இல்லறம் அல்லது நல்லறம் அன்று. கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 3 | |
| 4 | ஈயார் தேட்டை தீயார் கொள்வர். கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 4 | |
| 5 | உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 5 | |
| 6 | ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 6 | |
| 7 | எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 7 | |
| 8 | ஏவா மக்கள் மூவா மருந்து. கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 8 | |
| 9 | ஐயம் புகினும் செய்வன செய். கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 9 | |
| 10 | ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு. கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 10 | |
| 11 | ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 11 | |
| 12 | ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 12 | |
| 13 | அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 13 | |
| 14 | கற்பெனப்படுவது சொல் திறம்பாமை. கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 14 | |
| 15 | காவல்தானே பாவையர்க்கு அழகு. கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 15 | |
| 16 | கிட்டாதாயின் வெட்டென மற. கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 16 | |
| 17 | கீழோர் ஆயினும் தாழ உரை. கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 17 | |
| 18 | குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 18 | |
| 19 | கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 19 | |
| 20 | கெடுவது செய்யின் விடுவது கருமம். கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 20 | |
| 21 | கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 21 | |
| 22 | கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 22 | |
| 23 | கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி. கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 23 | |
| 24 | கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 24 | |
| 25 | கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை. கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 25 | |
| 26 | சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை. கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 26 | |
| 27 | சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 27 | |
| 28 | சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 28 | |
| 29 | சீரைத் தேடின் ஏரைத் தேடு. கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 29 | |
| 30 | சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல். கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 30 | |
| 31 | சூதும் வாதும் வேதனை செய்யும். கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 31 | |
| 32 | செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும். கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 32 | |
| 33 | சேமம் புகினும் யாமத்து உறங்கு. கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 33 | |
| 34 | சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண். கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 34 | |
| 35 | சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 35 | |
| 36 | சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 36 | |
| 37 | தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 37 | |
| 38 | தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை. கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 38 | |
| 39 | திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 39 | |
| 40 | தீராக் கோபம் போராய் முடியும். கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 40 | |
| 41 | துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 41 | |
| 42 | தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும். கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 42 | |
| 43 | தெய்வம் சீறின் கைத்தவம் மாளும். கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 43 | |
| 44 | தேடாது அழிக்கின் பாடாய் முடியும். கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 44 | |
| 45 | தையும் மாசியும் வையகத்து உறங்கு. கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 45 | |
| 46 | தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 46 | |
| 47 | தோழனோடும் ஏழைமை பேசேல். கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 47 | |
| 48 | நல்லிணக்கம் அல்லல் படுத்தும். கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 48 | |
| 49 | நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை. கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 49 | |
| 50 | நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை. கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 50 | |
| 51 | நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 51 | |
| 52 | நுண்ணிய கருமமும் எண்ணித் துணி. கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 52 | |
| 53 | நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு. கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 53 | |
| 54 | நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை. கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 54 | |
| 55 | நேரா நோன்பு சீராகாது. கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 55 | |
| 56 | நைபவர் எனினும் நொய்ய உரையேல். கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 56 | |
| 57 | நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர். கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 57 | |
| 58 | நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை. கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 58 | |
| 59 | பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 59 | |
| 60 | பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 60 | |
| 61 | பிறன் மனை புகாமை அறம் எனத் தகும். கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 61 | |
| 62 | பீரம் பேணி பாரம் தாங்கும். கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 62 | |
| 63 | புலையும் கொலையும் களவும் தவிர். கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 63 | |
| 64 | பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 64 | |
| 65 | பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும். கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 65 | |
| 66 | பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 66 | |
| 67 | பையச் சென்றால் வையம் தாங்கும். கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 67 | |
| 68 | பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 68 | |
| 69 | போனகம் என்பது தான் உழந்து உண்டல். கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 69 | |
| 70 | மருந்தே ஆயினும் விருந்தோடு உண். கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 70 | |
| 71 | மாரி அல்லது காரியம் இல்லை. கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 71 | |
| 72 | மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை. கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 72 | |
| 73 | மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 73 | |
| 74 | முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 74 | |
| 75 | மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம். கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 75 | |
| 76 | மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 76 | |
| 77 | மேழிச் செல்வம் கோழை படாது. கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 77 | |
| 78 | மை விழியார் தம் மனையகன்று ஒழுகு. கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 78 | |
| 79 | மொழிவது மறுக்கின் அழிவது கருமம். கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 79 | |
| 80 | மோனம் என்பது ஞான வரம்பு. கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 80 | |
| 81 | வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 81 | |
| 82 | வானம் சுருங்கின் தானம் சுருங்கும். கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 82 | |
| 83 | விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 83 | |
| 84 | வீரன் கேண்மை கூரம்பு ஆகும். கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 84 | |
| 85 | உரவோர் என்கை இரவாது இருத்தல். கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 85 | |
| 86 | ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 86 | |
| 87 | வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை. கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 87 | |
| 88 | வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை. கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 88 | |
| 89 | வைகல் தோறும் தெய்வம் தொழு. கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 89 | |
| 90 | ஒத்த இடத்து நித்திரை கொள். கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 90 | |
| 91 | ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம். கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 91 |