வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச் சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கென்று பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர் என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே. 9
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 4. நவகுண்டம் > பாடல்: 1023
The sacrificial pit takes the shape of Shining-bow and crescent moon; The tongues of Fire shot forth Unto mythical serpents from directions eight; And Kundalini too with its petals four In me flamed, Filling my inside with radiant light.
வில்லின் நுனி போன்ற இரண்டு நுனிகளுடன் விளங்கும் இளம்பிறை வடிவாகப் பொருந்திய குண்டத்தில் அந்த இரு நுனிகளிலும் எழுகின்ற தீ இரண்டு பாம்புகளாய் எங்கும் ஒளி வீசும். அவை ஒவ்வொன்றிற்கும் உள்ள பற்கள் நான்கு. இந்த நாகங்களுடன் பரந்தெழுகின்ற தீ எனது உடம்பினுள்ளும் இடங் கொண்டிருத்தல் வியப்பு.