முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன் அக்கணன் தானே அகிலமும் உண்டவன் திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன் எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே. 11
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 4. நவகுண்டம் > பாடல்: 1025
The Three-eyed Lord is Fire entire; The Lord of self-same eye, Engulfed universe entire; With eyes in directions all, He sees directions eight; He is Lord, my Father, And for all lives everywhere.
மூன்று கண்களை உடையவனாகிய சிவபெரு மானே அனைத்துத் தேவர்க்கும் வாயிலாகும் நிறைவான ஓமாக்கினி. அஃது எவ்வாறெனில், மண்ணை உண்டு உமிழும் அந்த மாயோனும், உலகங்களைப் படைக்கும் எண்கணனாகிய பிரமனும் தானேயாய் நிற்றலால். இதனானே, எங்கு யாவன் ஒருவன் தேவன் இருப்பினும் அவனுக்குப் பற்றுக்கோடாகின்றவன் சிவனே என்பது விளங்கும்.