மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள் ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும் வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழு நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே. 13
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 4. நவகுண்டம் > பாடல்: 1027
Within the sacrificial pit, that is Muladhara, Arises the Vedic Fire that is Kundalini, When controlled breath through Sushumna in unison flows, The two petals in Ajna Center open; Then with trembling hands Folded into one they rise; They who thus worship and vision, Are verily Celestials of Light Divine.
அகமும், புறமும் ஒற்றுமைப்படக் காட்டிய குண்டங்களில் எழுகின்ற தீயினுள்ளே, `காற்று` என்னும் ஒன்று, `இடைகலை, பிங்கலை` என இரண்டாய் இயங்கும். அவ் இயக்கத் திற்கு உரிய வழி மூன்றில் இரண்டு தடுக்கப்பட, ஒன்றில் மட்டுமே இயங்கச் செய்வோர் மேற்கூறிய ஒளியால் தேவராக மதிக்கப்படுவர்.