அளவில் இளமையும் அந்தமும் ஈறும் அளவியல் காலமும் நாலும் உணரில் தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல் அளவில் பெருமை அரியயற் காமே. 1
திருமந்திரம் > பாயிரம் > 9 திரு மும்மூர்த்திகளின் முறைமை > பாடல்: 103
Limitless youth, the beginning, and end And measuring out the Time, these four considered Sankara stands supreme and of His devotees To Hari and Aya infinite Grace goes.
என்றும் ஒழியாது செய்கின்ற படைப்பும், காப்பும், அழிப்பும், அருளும் என்ற நான்கனையும் ஆராயுமிடத்தும் அவை அனைத்தையும் சோர்வின்றிச் செய்பவன் சிவபெருமான் ஒருவனே. ஆயினும், மெய்யுணர்ந்தோராகிய அவன்றன் அடியார்கள் சொல் கின்ற அளவில்லாத அவன் பெருமைகள் `மால், அயன்` என்னும் இருவர்க்கும் ஏற்ற பெற்றி பொருந்துவனவாம்.