பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகவும் பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே. 18
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 4. நவகுண்டம் > பாடல்: 1032
Decagonal, octagonal, hexagonal and square Thus are sacrificial pits shaped, In them blazes fire As unto a crimson lotus; Center your thoughts, The Fire within (Kundalini) pervades the body entire As unto Siva-Sakti its tongues lapped.
பத்தும், எட்டும், ஆறும், நான்குமாகிய கோணங்களால் வரையறுக்கப்பட்ட குண்டமாகிய பொய்கையில் வளர்ந்து மலர்கின்ற தீயாகிய தாமரை மலரில் அடங்கிக் கலந்து நிற்கின்ற முப்பத்தாறு தத்துவங்களும், அவற்றின் காரியமாகிய உடம்பும் சத்தியிடமே அடங்கிநிற்பனவாம்.