திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 4. நவகுண்டம் > பாடல்: 1035
He is Mukti; He is Light goodly, In the thoughts of fully learned He is the Light fulsome; They who seek Him, desires severed, Through Light within Reach the goal And remain blemishless, ever after.
வீடு பேற்றைத் தருகின்ற ஞானவடிவினனும், வேள்வியில் நிறைவுடைய தீயாய் நிற்பவனுமாகிய சிவன், வேதங்களைக் கற்று அவ்வொழுக்க நெறியில் குற்றமின்றி நிற்பவரது உள்ளத்திலே விளங்கி நிற்பான். உலகப் பற்றுக்களைவிடுத்து அவனை யே நாடி, படர்ந்து எரிகின்ற அத்தீயிடமாக அவனை அணுகி வெகுளி முதலிய குற்றம் நீங்கி நின்றவர் அவனைப் பெற்று நின்றார்கள்.