சாதனை நாலு தழல்மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளையாறு பூநிலை போதனை போதுஐஞ்சு பொய்கய வாரணம் நாதனை நாடு நவகோடி தானே. 30
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 4. நவகுண்டம் > பாடல்: 1044
Of four sides unto Sadhanas four, (Chariya, Kriya, Yoga and Jnana) Of three sides unto shape of fire, Of semicircular shape unto the bent bow, Of circular shape like a bore, Of six sides unto Adharas within, Of eight sides like earth's cardinal directions, Of heart shape unto leaf of Peepul tree, Of five sides unto letters of Siva Mantra, Of oval shaped unto the the golden bowl Thus of yore are shaped, The nine Sacrificial Fire Pits, Where you seek Lord Supreme.
பயன்களில் சரியை முதலிய நான்கிற்கும் நாற்கோண குண்டமும், வேள்விக் கடன் முற்றுதற்கு முக்கோண குண்டமும், வெற்றிக்கு வில்லை ஒத்த பிறைக் குண்டமும், துன்ப நீக்கத்திற்கு விருத்த குண்டமும், எல்லாப் பயன்கட்கும் அறுகோண குண்டமும், நிலைபேற்றிற்கு அட்டகோண குண்டமும், ஆசிரியத் தன்மைக்குப் பதும குண்டமும், அழகிய கையையுடைய யானைமேற் செல்லும் அரசச் செல்வத்திற்குப் பஞ்சகோண குண்டமும் சிறப்பாக உரியனவாம். நவகுண்டங்களை இவ்வாறு பெரும்பான்மை பகுத்துணர்ந்து கொள்க.