திருமந்திரம் | Thirumanthiram

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே. 10

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம் > பாடல்: 1054

They who know say, Parasakti is Bliss;
They who know say, She is Formless,
They who know say, all action from Her desire flows;
They who know say, Param is in Her.

திரிபுரையை அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை, `ஆனந்தமாய் இருப்பவள்` என்றும், `அருவமாயும், உருவ மாயும் விளங்குபவள்` என்றும் `நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையினள்` என்றும் கூறுவர். அதனால், அறிவுருவின னாகிய சிவனும் அவள் வழியாகவே தோன்றுவான்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Nov 22, 2026