தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானோர் எழுந்து மதியை விளக்கினள் தேனார் எழகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே. 8
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 7. பூரண சக்தி > பாடல்: 1132
Of Herself She arose This Mistress of Tattvas, And illumined the Moon In the astral sphere within; Unto a column of treacle The light of Kundalini bright rises, Know you, where that Fawn dances!
உயிர்களின் முயற்சியாலன்றித்தானே விளங்கி நின்றவளாகிய அருட்சத்தி, இன்ப மழையைப் பொழிகின்ற மேகமாய் நின்று, ஞானத்தை விளங்கச்செய்தாள். இனி, இனிமையைத் தருவ தாகிய தேன்போல விளங்கிய அந்த ஞான ஒளியுடனே கூத்தப் பெருமான் செய்கின்ற ஆனந்த நடனத்தைக் கண்டு இன்புற வேண்டுவதுதான் உங்கட்குக் கடமை.