புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள் வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப் புனையவல் லாளையும் போற்றியென் பேனே. 25
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 7. பூரண சக்தி > பாடல்: 1149
She holds in Her Form The One Lord of Worlds all, She creates million, million universes vast In Her Thought; She is draped in Cosmic Light, She beautifies all, Her I stood adoring.
உலகத் தலைவனாகிய சிவனையும், உயிர்களாகிய எங்களையும் தாங்க வல்லவள்; உலகங்கள் அனைத்தையும் ஆக்க வல்லவள்; அவைகளைத் தனக்குள்ளே அடக்கிக் காக்க வல்லவள்; உலகத்து ஒளிகள் அனைத்தையும் தனது திருமேனியின் ஒளியாகச் செய்ய வல்லவள்; அத்தகைய பேராற்றல் உடையவளாகிய பூரண சத்தியையே நான் துதிக்கின்றேன்.