அதுஇது என்பர் அவனை அறியார் கதிவர நின்றதோர் காரணம் காணார் மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே. 30
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 7. பூரண சக்தி > பாடல்: 1154
This and "That", they say, is God, They Know Him not, the True One They know not, Who ultimate liberation grants, fortress erected and protected by our Guru Paramparai. They know not Lady Great of honeyed-flower bedecked tresses, That Grace confers; Of muddled thinking they are.
`அதற்குக் காரணம் அதற்கு முன்னுள்ள அந்த ஒன்று; இதற்குக் காரணம் இதற்கு முன்னுள்ள இன்னொன்று` என்று இப்படிக் காரியப்பொருள்கள் பலவற்றிற்கும் பல காரணப் பொருள்களையே முடிந்த காரணப் பொருளாக மயங்கி, அனைத்துக் காரணங்கட்கும் காரணமாய் உள்ள பொருளை உணரமாட்டாதவர் சிவனை அறியுமாறில்லை. அதனால், முத்திக்கு வழியை அவர் அறியாதவரே யாகின்றனர். அவர் அன்னராதல் சத்தியின் இயல்பை முற்பட உணராமை யாலேயாம். ஆதலின், அவர் உண்மைச் சிந்தனையாளர் அல்லர்.