மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப் பாதிநல் லாளும் பகவனும் ஆனது சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல் வேதனை தீர்தரும் வௌfளடை யாமே. 3
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1157
The Lady Benevolent with Her Spouse remained, Sharing Her Half with Supreme God Follow that Lady of Divine Light And gain Her support; All sorrows will see their end; And you become blemishless Pure.
சத்தி தனது மணாளனாகிய சிவன் ஒருபோதும் தன்னைவிட்டு நீங்காதிருத்தலினாலே ஒரு பாதியேதானாய், மற்றொரு பாதி அச்சிவனாய் இருக்கின்றாள். (இந்நிலை எக்காலத்தும் வேறு படுதல் இல்லை என்றபடி) அத்தன்மையை உடைய ஒளி வடிவி னளாகிய அவளைத் துணையாக உங்கள் உள்ளத்தில் இருத்த வல்லீ ராயின், எல்லாத் துன்பமும் நீங்கும்; வெளுக்கப்பட்ட ஆடைபோல் ஆன்மா மும்மலங்களும் நீங்கத் தூயதாய் விளங்கும்.