பெண்ணொரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது பெண்ணுடை ஆண்என் பிறப்பறிந்து ஈர்க்கின்ற பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே. 5
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1159
Woman espousing Woman Strange indeed it is! From Woman arose Man; When you know the why of this, No more will there be talk Of Sakti from Sivam arising.
ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு புணர்தலால் பயனின்மையின் அங்ஙனம் புணர்தல் பேதமைச் செயலாதல் தெளியப் பட்டதாயினும், அச்செயலால் ஆண் ஒன்று பிறந்த பயன் ஓரிடத்தில் காணப்படுகின்றது (இஃது அதிசயம்) இனி, புணரப்பட்ட அப் பெண்ணிடத்தினின்றும் பிறந்த அந்த ஆணின் உண்மையை உணர்ந்து, யாவரையும் அந்த ஆணினிடத்தே ஈர்த்து வைக்கின்ற அந்தப் பெண்ணைத் துணைவியாக உடைய அந்த ஆணின் பக்கல் அந்தப் பெண் ஈர்த்தவாறே சென்று அடைவதே, `இஃது இயற்கைக்கு மாறாய் இயலாததொன்றாம்` என்று பேசும் பேச்சு அற்றொழிதற்கு வழியாம்.