உலந்துநின் நான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடு உகந்துநின் றான்நம் உழைபுக நோக்கி உகந்துநின் றான்இவ் வுலகங்கள் எல்லாம் உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே. 8
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1162
With Fore-head eye, Lord stood in delight; Lord stood in delight Seeking to enter our hearts; Lord stood in delight For all worlds to delight; Lord stood in delight with Sakti Her shoulders in embrace entwined.
நம்பியாகிய சிவன் காமனை எரித்த நெற்றிக் கண்ணோடு நின்றே மேற்கூறிய நங்கையாகிய வேத முதல்வியை விரும்பி நின்றான். பின்பு அவளது தோள்களைத் தன் தோளோடு ஒன்றாகும்படிச் சேர்த்து மகிழ்ந்து நின்றான். இவை முறையே அவன் உயிர்களாகிய நம்மிடம் வருதல் குறித்தும் அனைத்து உயிர்களுக்கும் போகத்தைத் தருதல் குறித்துமாம்.