மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம் ஏன்றுள ஈராறு எழுகலை உச்சியில் தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை ஏன்றனள் ஏழிரண்டு இந்துவோடு ஈறே. 33
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1187
Three the spheres the Mohini ascends to At top She appears In Sphere of Sun of Kalas twelve With Kalas fourteen She is Mamaya; And in Moon's Sphere The Bright One finite appears.
மேற்கூறிய மூன்று மண்டலங்களும் அசுத்த மாயையின் காரியங்களாய் நிற்கும் உடம்பில் உள்ள இடங்களே. எனினும், உச்சிக்கு மேல் பன்னிரண்டங்குலத்தில் உணர்வு செல்லின் அது சுத்த மாயையைப் பொருந்தியதாகும். அங்ஙனம் உணர்வு செல்லும்பொழுது சத்தி, பிராசாத கலைகள் பதினாறில் ஒன்பதை ஏற்றுச் சந்திர மண்டலத்தைக் கீழ்படுத்தி நிற்பாள்.