மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி தாவிய நற்பதத் தள்மதி யங்கதிர் மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார் ஓவினும் மேலிடும் உள்ளொளி யாமே. 39
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1195
She has Spheres Three Of Fire, Moon and Sun She is Head of all three together, She abandons you not Even if you forget Her; She is Light within.
அக்கினி மண்டலம் முதலிய மூன்று மண்டலங் களுடன் அவற்றிற்குரியோராகிய, `அக்கினிதேவன், நிலவோன், கதிரோன்` என்னும் மூவரும் கலந்து, அவரே சத்தியாய் முன்னிற்பர். அவர்களுக்கு உள்ளீடாக ஓங்காரத்தினின்றும் மேலெழுந்து செல்கின்ற மந்திர ஒளி உளதாகும்.