நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடிநின்று ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உளஅவை வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின்று ஆதியும் அந்தமும் ஆகிநின் றாளே. 64
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1218
The Jiva and Tattvas four times nine Are there; Among them are the active group of Five (Senses); In the body so constituted She stands as Beginning and End, Praised by Brahma and the twice-nine Ganas.
தலைவனாகிய இறைவனும், அவனால் செயற் படுத்தப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களும் ஏற்ற பெற்றியால் பொருந்தி நிற்பவனவாகச் சொல்லப்படுகின்ற நிலையங்கள் ஐந்து உள்ளன. அவைகளில் பிரமன் முதலியோரும், பதினெண், கணங்களும், வந்து வணங்கச் சத்தி அவற்றிற்கு முதலும், முடிவுமாகி நிற்கின்றாள்.