ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி ஆகிய ஐம்பத்துடனே அடங்கிடும் ஆகும் பராபரை யோடுஅப் பரையவள் ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே. 70
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1224
She that stands in Eye-brow center is Manonmani, She one with Fifty Letters becomes; She is Para Parai and Parai too; She is of the Acts Five-- Creation, Preservation, Dissolution, Obfuscation and Redemption.
`மேன்மைத் தானம்` எனப்படுவதாகிய ஆஞ்ஞை யில் சத்தி விளக்கமுற்றுத் திகழும் நிலையில் அது முதல் மூலாதாரம் ஈறாக நிற்கின்ற ஐம்பது எழுத்துக்களும் அவளிடத்தே செயலற்று அடங்கிவிடும். அஃது எவ்வாறெனின், சுத்த மாயையினின்றும் விருத்திப்படுகின்ற நால்வகை வாக்குகளில் அவ் எழுத்துக்களுக்கு முதல் நிலைகளாகிய `பைசந்தி, சூக்குமை` என்னும் வாக்குகளாய் நிற்றலோடு, ஐந்தொழிலையும் தன்னுடையனவாக உடையவள் அவளேயாதலின்.