தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன் ஆனந்த மோகினி யாம்பொன் திருவொடு மோனையில் வைத்து மொழிதரு கூறது ஆனவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே. 72
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1226
At the far end of Cranium top She abides, Ananda Mohini, the Golden Lady; Meditate on Her in Silentness chanting Aum, That way lies life's Redemption.
ஆதி சத்தி, யோகியரது உச்சியிலும், அதற்கு மேலுள்ள பன்னிரண்டு அங்குலமாகிய நிராதாரத்திலும் குண்டலி சத்தியோடு அவட்கு முன்னவளாம்படி வைத்துச் சொல்லப்படும் வியட்டிப் பிரணவநிலைகளே பிரணவ யோக நெறியாகும்.