மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி யார்க்கும் அறிய அரியாள் அவளாகும் வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே. 73
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1227
She gave birth to Faiths several, She is Manonmani, Mangali the Auspicious, Rare is She for any to know, To them that seek Her United in word and thought, She as Wisdom Subtle appears.
ஆதி சத்தி, பலவகைப்பட்ட யோக நெறிகளையும் அவரவரது பக்குவத்திற்கு ஏற்ப அமைத்து வைத்தவள்; நிலையான மங்கலத்தை உடையவள்; ஆதலின், அவள் யார்க்கும் அறிதற்கரிய வளாவாள். ஆயினும் பாச ஞானம், பசுஞானம் என்னும் இரண்டும் ஒருசேர நீங்கும்படி விட்டுப் பதிஞானத்தால் அறிகின்ற பெரியோர்க்கு அவரது அறிவுக் கறிவாய் அவள் விளங்குவாள்.