சத்தியம் நானும் சயம்புவம் அல்லது முத்தியை யாரும் முதல்அறி வாரில்லை அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால் மத்தியில் ஏற வழியது வாமே. 76
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1230
None except Sakti, Siva and (I) Jiva know The Source of Mukti Finite; When you meditate constant on Sakti That as Aum ripens, That the Way sure To enter the Center aloft Sahasrara.
`சத்தியும், யானும், சிவமும்` என்னும் மூவர் தவிர, வீடுபேற்றினை அதன் முதல் பற்றி அறிபவர் ஒருவரும் இல்லை. முதுகந் தண்டாகிய எலும்பின்கண் பிராண வாயுவைக் கும்பித்தால், அவ் எலும்பு பக்குவப்பட்டு, அந்தப் பிராணவாயு சுழுமுனையூடே மேல் ஏறிச் செல்லுதற்கு ஏற்றதாகும்.