சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 16
திருமந்திரம் > முதல் தந்திரம் > 1 உபதேசம் > பாடல்: 128
In space pure is Impassivity seated, In space pure It does repose, Impassivity begins where Vedas end, Who Impassivity saw, inside Vedas they slept.
செயலறுதியில் நிற்கும் சிவசித்தர்கள் இருப்பதும் கிடப்பதும் மாசொடு படாததாய பரவெளியிலேயாம். ஆகவே, அவர்தம் உணர்வு நிற்கும் இடம், வேதம் எட்டமாட்டாது நின்றுவிட்ட இடமாம். அதனால், அவர்களும் அவ்வேதத்தை நோக்குதற்கண் மறதியே பெற்றார்.