திருமந்திரம் | Thirumanthiram |
ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேயாகப்
போமே அதுதானும் போம்வழியே போனால்
நாமே நினைத்தனை செய்யலு மாகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே. 7
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 11. சாம்பவி மண்டலச் சக்கரம் > பாடல்: 1303
The Five Holy letters yours shall be
Persevere their Way,
If you so proceed,
You shall achieve all you wish
None the enemies,
In the World here below.
திருவைந்தெழுத்து எஞ்ஞான்றும் நன்மைக்கு ஏதுவாம் வழி உண்டாகவே செய்யும். அதனையே தெளிந்து வல்லாராதல் யாருக்குக்கூடும்! கூடுமாயின், நினைத்தவற்றை முடித்தல்கூடும். உலகில் நமக்குப் பகைவரும் இலாரவர். PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக