திருமந்திரம் | Thirumanthiram

தானே வெளியென எங்கும் நிறைந்தவன்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவன்
தானே அனைத்துள அண்ட சகலமே. 43

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 13. நவாக்கரி சக்கரம் > பாடல்: 1361

She is spaces all, She filled spaces all;
She is the space beyond spaces
She created all, She preserved all,
She is universe all, and lives all.

மேற்கூறிய மெய்ப்பொருளாகிய ச்ததி, தான் ஒருத்தியே பூதாகாயமாகி எங்கும் நிறைந்தும், பராகாயமாகி எல்லா வற்றிற்கும் மேலாகியும் நிற்பாள். தானே எல்லாப் பொருளையும் தோற்றுவித்து அழிப்பவளாவாள். தானே பலவாயுள்ள அண்டங் களையும் தனது வடிவமாக உடையவளாவாள்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Nov 25, 2026