பாலை - தோழி கூற்று
நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே.
-சேரமானெந்தை.
குறுந்தொகை > நூல் > பாடல்: 22
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக