நெய்தல் - தலைமகள் கூற்று
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.
-காமஞ்சேர் குளத்தார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 4
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக