129. வேங்கை முன்றில்! பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: இயன் மொழி. சிறப்பு : தேறலுண்டு குரவை ஆடுதல்; பரிசிலர்க்கு யானைகளை வழங்கல். குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள் வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, வேங்கை முன்றில் குரவை அயரும், தீஞ்சுளைப் பலவின், மாமலைக் கிழவன்; ஆஅய் அண்டிரன், அடுபோர் அண்ணல்; இரவலர்க்கு ஈத்த யானையின், கரவின்று, வானம் மீன்பல பூப்பின், ஆனாது ஒருவழிக் கருவழி யின்றிப் பெருவெள் ளென்னிற், பிழையாது மன்னே.
புறநானூறு > பாடல்: 129
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக