128. முழவு அடித்த மந்தி! பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: வாழ்த்து; இயன்மொழியும் ஆம். மன்றப் பலவின் மாச்சினை மந்தி இரவலர் நாற்றிய விசிகூடு முழவின் பாடின் தெண்கண், கனி செத்து, அடிப்பின், அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும், கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்; ஆடு மகள் குறுகின் அல்லது, பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.
புறநானூறு > பாடல்: 128
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக