127. உரைசால் புகழ்! பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன்: வேள் ஆய் அரண்டின். திணை: பாடாண். துறை: கடைஇநிலை. ‘களங் கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ்ப் பாடு இன் பனுவல் பாணர் உய்த்தெனக், களிறில வாகிய புல்லரை நெடுவெளிற், கான மஞ்ஞை கணனுடு சேப்ப, ஈகை அரிய இழையணி மகளிரொடு சாயின்று’ என்ப, ஆஅய் கோயில்; சுவைக்கு இனி தாகிய குய்யுடை அடிசில் பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி, உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய முரைசு கெழு செல்வர் நகர்போ லாதே.
புறநானூறு > பாடல்: 127
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக