133. காணச் செல்க நீ! பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை. மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியிற் கேட்பின் அல்லது, காண்பறி யலையே; காண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின் விரை வளர் கூந்தல் வரைவளி உளரக், கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, மாரி யன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!
புறநானூறு > பாடல்: 133
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக