146. தேர் பூண்க மாவே! பாடியவர் : அரிசில் கிழார். பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். திணை: பெருந்திணை. துறை: குறுங்கலி. அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை அவை பெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக! சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல நன்னாடு பாட, என்னை நயந்து பரிசில் நல்குவை யாயின், குரிசில் ! நீ நல்கா மையின் நைவரச் சாஅய், அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன, ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத், தண்கமழ் கோதை புனைய, வண்பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே!
புறநானூறு > பாடல்: 146
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக