145. அவள் இடர் களைவாய்! பாடியவர் : கபிலர். பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். திணை: பெருந்திணை. துறை: குறுங்கலி. 'பரணர் பாட்டு' எனவும் கொள்வர். ‘மடத்தகை மாமயில் பனிக்கும்’ என்று அருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக், கடாஅ யானைக் கலிமான் பேக! பசித்தும் வாரோம்; பாரமும் இலமே ; களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி, ‘அறம்செய் தீமோ, அருள்வெய் யோய்!’ என, இ·தியாம் இரந்த பரிசில்: அ·து இருளின், இனமணி நெடுந்தேர் ஏறி, இன்னாது உறைவி அரும்படர் களைமே!
புறநானூறு > பாடல்: 145
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக